முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக்கியவர் ஷங்கர். அதையடுத்து, இப்போது தான் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரே நாளில் விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கிறாராம்.
அதாவது, ஒரேநாளில் தன்னை பேரழகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதையின் வில்லன் ஒரு மருந்தை கண்டு பிடித்து, அதை தனது உடம்பிலேயே செலுத்தி பரிசோதனை செய்து பார்ப்பாராம்.
ஆனால், அந்த மருந்து அவரை ஒரு கொடூரமான தோற்றத்துக்கு மாற்றி விடுமாம். இதனால் அந்த மருந்தில் இருந்த குறைபாடுகளை கண்டுபிடித்து அவற்றை நீக்கி அதை விக்ரம் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்வாராம்.
ஆனால், அவரோ, அந்த மருந்து உடம்பில் சென்றதும் மிக மிக அழகானவராக மாறிவிடுவாராம். அதோடு, அந்த அழகு காரணமாக ஒரே நாளில் புகழின் உச்சிக்கும் சென்று விடுவாராம் விக்ரம். ஆனால் அது சில மாதங்களிலேயே மாறி, அந்த மருந்தின் மோசமான பக்க விளைவுகளால் விக்ரமும் கொடூரமான தோற்றத்துக்கு மாறி விடுவாராம். அதையடுத்து, அந்த மருந்தினால் கொடிய மிருகங்களாக மாற்றப்பட்ட விக்ரமும், வில்லனும் அதன் பாதிப்பில் இருந்து எப்படி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள் என்பதுதான் ஐ படத்தின் முக்கிய கதையாம்.

cinema,i , shankar