விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!

விஜய்-அஜீத் ரசிகர்கள் இணையதளங்களில் மாறி மாறி மோதிக்கொள்வது வழக்கமாக நடந்து வரும் ஒன்றுதான். அதோடு சமீபத்தில் குஷ்பு, பாடகி சின்மயி பற்றி தவறான கருத்து வெளியிட்டு விஜய்யை அவரது ரசிகர்கள் சங்கடப்படுத்தினர். இதனால் கோபமடைந்த விஜய், இப்படி தேவையில்லாமல் மற்றவர்களை வம்புக்கு இழுத்து என் இமேஜை டேமேஜ் பண்ணினால் ரசிகர்கள மன்றங்களையே கலைத்து விடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அது நடந்து ஒருவாரம்கூட ஆகாத நிலையில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையை கோர்ட் அறிவித்திருப்பதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடியது போன்று விஜய் ரசிகர்களும் கொண்டாடினார்களாம். இதற்கு காரணம், கடந்த எம்எல்ஏ தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தனது ரசிகர்களை ஓட்டளிக்க வைத்தபோதும், அவர் படங்கள் வெளியாகும் நேரங்களில் ஏதேனும் பிரச்னைகளை ஆளுங்கட்சியினர் ஏற்படுத்தி வருவதுதான்.
ஆனபோதும், அதையெல்லாம் மனதில் கொண்டு இப்படி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியது விஜய்க்கு பிடிக்கவில்லையாம். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பற்றி எந்தவித விவாதங்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது என்று விஜய் ரசிகர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது போன்று அவரது ரசிகர்கள் ஒரு போலியான அறிக்கையினையும் பேஸ்புக்கில் வெளியிட்டு விஜய்க்கு இன்னும் பெரிய டென்சனை ஏற்படுத்தி விட்டுள்ளார்களாம். இதனால் பிரச்னைகள் பெரிதாகும் முன்பே ரசிகர் மன்றங்களை கூப்பிட்ட பேச வேண்டும் என்று விஜய் வட்டாரம் பலத்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறதாம்.