அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!

கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தவர் த்ரிஷா. அந்த படத்தில் த்ரிஷாவை புடவை கெட்டப்பில் நடிக்க வைத்த கெளதம், சிம்பு-த்ரிஷாவுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகளையும் இளசுகள் விரும்பும் வகையில் டச்சிங்காக படமாக்கியிருந்தார்.

அதனால் மெகா ஹிட்டான அப்படம், கெளதம்மேனன் கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படமானது. அதனால் அதையடுத்து, அந்த படத்தை இந்தியில் ஏக் திவானா தா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரன்பீர்கபூர் நாயகனாக நடித்த அந்த படத்தில் தமிழில் த்ரிஷா நடித்த வேடத்தில் ஐ பட நாயகி எமி ஜாக்சன் நடித்திருந்தார். அப்படம் ஹிட்டடித்தது.
இந்த நிலையில், தற்போது அஜீத்தை வைத்து தான் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திலும் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைத்திருக்கும் கெளதம்மேனன், இன்னொரு நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவை விட த்ரிஷாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், த்ரிஷா தனது செண்டிமென்ட் நாயகி என்பதினால் தானாம். இந்த விசயத்தை முன்பு அறிந்திராத அனுஷ்கா, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வந்தபோது தான் த்ரிஷா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். என்னை பெயரளவிற்கு யூஸ் பண்ணி விட்டார்கள் என்று பீல் பண்ணினாராம்.