தமிழில் தற்போதுதான் முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார் சமந்தா. அவர் நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த 'அஞ்சான்' படம் அவருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்றாலும், அவரைப் பற்றி பேச வைத்துவிட்டது.
இருந்தாலும் விஜய் ஜோடியாக நடித்து வரும் 'கத்தி' படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இதனிடையே தமிழில் அவர் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு இயக்குனர் சமந்தாவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை சமந்தாவுக்கு மிகவும் பிடித்துப் போக அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் என்றும் சொன்னாராம். மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தில் சமந்தா நடிக்கப் போவதில்லை. படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் , எத்தனை நாட்களில் படப்பிடிப்பு முடியும் போன்ற விவரங்களை சமந்தா கேட்டிருப்பதாகவும், அந்தத் திட்டமிடல் முடிந்த பின் அது பற்றி சமந்தா முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
இன்றைய தலைமுறையில் விஷால், சூர்யா போன்ற ஹீரோக்கள்தான் தற்போது தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள். அவர்களோடு படம் தயாரிக்கும் இன்றைய தலைமுறை ஹீரோயினாக சமந்தாவும் சேருவாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்

cinema,samantha