அந்த காலம் (சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!)எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்…
என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவில் எல்லா பட்டாளங்களும் கொஞ்சம் சீனியராக இருக்கும் ஒரு அண்ணாவோ அக்காவோ வழிகாட்ட…விளையாட்டுக்கள் களை கட்டும்….
பாலம்மா, எங்க அம்மா, ஜோயல் அம்மா இன்னும் தெருவில் இருக்கும் எல்லா அம்மாக்களும் வாசலில் மாலை நேரத்தில் வரும் முல்லை பூவையோ அல்லது கொல்லையில் இருந்து பறித்த டிசம்பர் பூவையோ கட்டிக் கொண்டு ….ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்பாக்கள் எல்லாம் அமைதியாக திருச்சிராப்பள்ளி வானொலியையோ, இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளையோ அல்லது விவித பாரதியையோ கேட்டுக் கொண்டும் ஏதேனும் பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டோ, இரவு 8:40 தூர்தர்ஷன் செய்திகளுக்காக காத்துக் கொண்டோ இருப்பார்கள்….இல்லை கடைகளுக்குச் சென்று வார இறுதிக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அல்லது பிள்ளைகளை கூப்பிட்டு வைத்துக் கொண்டு விளையாடுவதற்கும் தயாராகி இருப்பார்கள்…
எத்தனை விளையாட்டுக்கள் இருந்தனஅப்போது எல்லாம், குலை குலையா முந்திரிக்கா, கிளிக்கோடு, கல்லா மண்ணா, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் விளையாட்டு…..எவ்வளவு சந்தோசமாய் கண்ணாமூச்சி ரே…ரே காதடைபார் ரே என்று யாரோ ஒரு அண்ணாவோ அக்காவோ கண்ணை பொத்தி விட ஒவ்வொருத்தராய் கண்டு பிடித்து வர வேண்டும்….!
வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம். கால்களை நீட்டி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அக்கா…அக்கா ஈர்வேலி (சீப்பு மாதிரி இருக்கும் தலையில் இருக்கும் ஈறினை எடுக்க மரத்தால் செய்யப்பட்ட ஒன்று ..பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலுமிருக்கும்)… என்று ஒரு விளையாட்டு…. என்று கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை….
இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?