மீண்டும் மனிதர்களுக்கு உதவும் விலங்கு படம்

ஆட்டுக்கார அலமேலு, பஞ்ச கல்யாணி, ராம் லட்சுமணன் இப்படிப்பட்ட படங்களில் விலங்குகள் மனிதர்களின் நண்பர்களாக இருந்த உதவி செய்யும். இந்த வகை படங்களை ராம நராயணன் அதிகமாக இயக்கினார்.

சமீபகாலமாக இந்த மாதிரி படங்கள் வருவதில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீனி என்ற படம் வருகிறது. இதில் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக புதுமுகம் சஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு எம்பிஏ படித்து பெரிய தொழிலதிபராக வேண்டும் என்கிற ஆசை, அதற்க்கு சீதா என்ற பெண் யானை உதவுகிற மாதிரி கதை.
ஓவியாவுடனான காதலுக்கும், அந்த யானை உதவுகிறது. பல நடிகர்களின் மானேஜராக இருந்த மதுரை செல்வம் தயாரிக்கிறார். ஐ லவ் யூடா படத்தை இயக்கிய ராஜதுரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். நாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்லை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.