ஆண்ட்ரியாவுக்கு அங்கீகாரம் கொடுத்த அரண்மனை!

நடிகை, பாடகியாக இரண்டு முகம் காட்டி வந்த ஆண்ட்ரியா, தரமணி படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்து எழுதி பாடி இசையமைப்பாளராகவும் தனது மூன்றாவது முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கிடையே கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த அவர், அதற்கடுத்து விஸ்வருபம்-2, உத்தமவில்லன் ஆகிய படங்களிலும் நடித்து வரிசையாக கமலுடன் 3 படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், இதுவரை ஏ கிளாஸ் நடிகை என்ற பட்டியலிலேயே இருந்து வந்த ஆண்ட்ரியா தற்போது சுந்தர்.சியின் அரண்மனை படம் மூலம் பி அண்ட் சி கிளாஸ் ரசிகர்களையும் சென்றடைந்திருக்கிறார். இதனால் சுந்தர்.சி ஒரே படத்தில் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து விட்டார் என்று குதூகலிக்கிறார் ஆண்ட்ரியா.
அதோடு, இதுவரை திகில் படங்களில் நடிக்காத நான் இந்த படத்தில் ஆவேசமான பேய் வேடத்தில் நடித்திருப்பது புதிய அனுபவத்தைக்கொடுத்தது. அதனால் இனிமேல் இன்னும் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறேன். கூடவே ஆண்ட்ரியா இந்த மாதிரி வேடங்களுக்கெல்லாம் பொருந்துவாரா என்று சான்ஸ் கொடுக்க தயங்கிய இயக்குனர்கள்கூட இந்த படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள் என்று கூறும் ஆண்ட்ரியா, இதுவரை எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இந்த அரண்மனை படம்தான் எனக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்கிறார்.