சுவிட்சர்லாந்தில் விஷால்-ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ்!

தாமிரபரணி படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது ஏற்கனவே முடிவாகி விட்டது. அதையடுத்து, கத்தி மற்றும் ஐ படங்களும் ரிலீசாவது அடுத்தடுத்து முடிவாகி விட்டபோதும், சில முக்கிய தியேட்டர்களை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றி வைத்துள்ளதாம்.

அதனால், தற்போது படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பேட்ச் ஒர்க் படப்பிடிப்புகளையும் சேர்த்து இப்போதே நடத்திக்கொண்டிருக்கிறார் ஹரி. மேலும் வசன காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் இப்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
அதில் விஷால்-ஸ்ருதிஹாசன் பங்குபெறும் ஒரு ரொமான்டிக்கான பாடலை படமாக்க தற்போது சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறார்கள். ஓரிரு வாரங்களாக அங்கு முகாமிட்டு டூயட் மட்டுமின்றி இன்னொரு பாடலையும் படமாக்கி விட்டே நாடு திரும்புகிறதாம் பூஜை யூனிட். இந்த செட்யூல்டோடு கிட்டத்தட்ட பூஜை படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விடும் என்கிறார்கள்.