பெண் டான்ஸ் மாஸ்டருடன் பிரபுதேவா காதல்?

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. தந்தை வழியிலேயே நடன மாஸ்டராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சில பாடல்களில் நடனமாடி வந்த அவரை டைரக்டர் ஷங்கர் தனது காதலன் படத்தில் ஹீரோவாக்கினார். அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்தார் பிரபுதேவா.
1995ல் தனது நடன குழுவில் இருந்த ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால், வில்லு படத்தை இயக்கியபோது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.
ஆனால் அவரையும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தவர் பின்னர் திருமணம் செய்து கொள்ளும் கடைசி நேரத்தில் பிரிந்தார்.அதைத் தொடர்ந்து இந்தி சினிமாவிற்குள் சென்று கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வரும் பிரபுதேவா, தற்போது அஜய்தேவ்கானை வைத்து ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபுதேவா அந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரிடத்தில் மறுமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டபோது, என் வாழ்க்கையில் இன்னொரு திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். ஆனால், கடந்த சில தினங்களாக, பிரபுதேவாவுக்கும் ஒரு இந்தி பெண் டான்ஸ் மாஸ்டருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பையில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால். இந்த செய்தி குறித்து பிரபுதேவா தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.