அனிருத்துடனான முத்தக்காட்சி புகைப்படங்கள் வெளியான பிறகு கிட்டத்தட்ட ஆண்ட்ரியா பட்டிதொட்டியெல்லாம் பரவி விட்டார். அவரை தெரியாத ரசிகர்களே இல்லை என்கிற நிலை உருவானது.
மேலும் அதன்பிறகுதான் கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என ஒரே நேரத்தில் பூஜாகுமாரைப் போலவே 3 படங்களிலும் வரிசையாக நடித்தார் ஆண்ட்ரியா. அதையடுத்து, இப்போது அரண்மனை அவரை இன்னும் பேச வைத்து விட்டது. அப்படத்தில் ஹன்சிகா, ராய்லட்சுமியெல்லாம் இருப்பதால் ஆண்ட்ரியாவை டம்மியாகத்தான் நடிக்க வைத்திருப்பார்களோ என்று பார்த்தால், அவர்தான் படத்தின் லீடு ரோலில் நடித்திருக்கிறார்.
அதனால் இந்த படத்திலிருந்து பரவலாக பேசப்படும் நடிகையாகி விட்டார் ஆண்ட்ரியா. அதனால் அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வரும் அவர், முன்னணி நடிகை பட்டியலில சேர்ந்து விட வேண்டும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அவரது கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக மலையாளத்தில் பயர்மேன் என்ற படத்தில் மம்மூட்டியுடன் நடிக்க ஆண்ட்ரியாவை ஒரு வாய்ப்பு அழைத்தது. முதலில் இப்போதைக்கு சான்சே இல்லை என்று சொன்ன ஆண்ட்ரியா, பின்னர் மம்மூட்டி படம் என்றதும் ஓ.கே சொல்லி கமிட்டாகி விட்டாராம்.
மலையாளத்தில் ப்ருதிவிராஜூடன் நடித்த லண்டன் பிரிட்ஜ் படத்துக்குப்பிறகு பயர்மேன் படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியாவுக்கு அப்படத்திலும் வெயிட்டான வேடமாம். அதனால்தான் தமிழில் பிசியாக இருந்தபோதும் அந்த வாய்ப்பை விட மனசில்லாமல் பிடித்துக்கொண்டாராம் ஆண்ட்ரியா.