தனுஷ் புராணம் பாடும் கோலிவுட் இயக்குனர்கள்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்கள் ஒவ்வொருவருமே தங்களைச்சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது, டைரக்டர்கள் கதை சொல்லும்போது, சென்சார் போர்டு கட் பண்ணுவது போன்று இவர்களும் இந்த மாதிரி காட்சிகளெல்லாம் எனது இமேஜ்க்கு பங்கம் விளைவித்து விடும் என்று கத்தரி கொண்டு கட் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.
ஆக, அந்த டைரக்டர் கதையை சொல்லி முடிக்கும்போது அந்த கதை வேறு மாதிரியான கோணத்தில் போய் நிற்கும். குறிப்பாக, அவர் எந்த ஹீரோவிடம் கதை சொன்னாரோ அவர் விரும்பத்தகுந்த கதையாக உருமாறியிருக்கும். ஆனால் இந்த விசயத்தில் தனுஷ் வித்தியாசமானவர்.
டைரக்டர்கள் சொல்லும் கதையில் தனது சார்பில் தேவையில்லாத திருத்தங்களை செய்ய மாட்டார்.அதோடு, எனது ரசிகர்கள் இப்படித்தான் என்னை திரையில் பார்க்க விரும்புவார்கள். எனக்கு இந்த மாதிரியான பாணியில் நடிக்கத்தான் பிடிக்கும் என்றெல்லாம் வம்படியாக எதையும் மாற்ற சொல்ல மாட்டார். அப்பா அம்மாவிடம் அடி வாங்க வேண்டுமா?. காதலியிடம் அடி வாங்க வேண்டுமா? கதைக்கு தேவையென்றால் நான் நடிக்கத் தயார் என்கிறாராம். உதாரணத்திற்கு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தம்பியின் காரை கூட கழுவியபடி நடித்தார்.இதனால் கோலிவுட்டின் இயக்குனர்கள் வட்டாரத்தில் தனுஷ் மீதான மதிப்பும் மரியாதையும் உயர்ந்து நிற்கிறது. நடிகர் என்றால் இவர் மாதிரிதான் இருக்க வேண்டும் என்று தனுஷ் புராணம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.