பாரதிராஜாவால் 'கண்களால் கைது செய்' படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவரும், 2007ம் ஆண்டு வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவரான நடிகை பிரியாமணியை தமிழ்த் திரையுலகம் மறந்தே போய்விட்டது.
'பருத்தி வீரன்' படத்தில் அவர் ஏற்று நடித்த முத்தழகு கதாபாத்திரம் என்றுமே மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக நம் மனதில் இடம் பிடித்ததற்குக் காரணம் பிரியாமணியின் அபாரமான நடிப்பும் ஒன்று. அந்தப் படத்திற்குப் பின் விஷால் ஜோடியாக 'மலைக்கோட்டை', பரத் ஜோடியாக 'ஆறுமுகம்', பிருத்விராஜுடன் 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய படங்களில் நடித்தார்.
அவற்றில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் மட்டுமே வெற்றிகரமாக ஓடியது.
தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 'ராவணன்' படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு பின்னடைவைத்தான் தந்தது. அடுத்து கன்னடத்திலிருந்து வந்த 'சாருலதா' படத்திலும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஷாரூக் கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு சரியான குத்தாட்டமும் போட்டார். அதன் மூலம் ஹிந்தித் திரையுலகிலும் பிரபலமானார். தமிழில் நடிக்கவில்லையென்றாலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார். ஆனால், ஏனோ தமிழ்த் திரையுலகம் தேசிய விருது வென்ற ஒரு தமிழ் நடிகையை மறந்தே விட்டது. ஒரு வேளை பிரியாமணியே தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா என்றும் தெரியவில்லை.

cinema,priyamani