ரிலீசிற்கு தயாராகிறது முனி-3

நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் 3வது பாகமும் தற்போது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தையும் லாரன்சே இயக்கி நடித்துள்ளார்.

முனி-3ன் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் பாடல்கள் மட்டும் எடுக்கப்பட உள்ளன. தற்போது படத்தின் காட்சிகளை எடிட்டிங்க செய்யும் பணியில் லாரன்ஸ் மும்முரமாக இறங்கி உள்ளார்.


முனி படத்தின் முதல் பாகத்தில் வேதிகாவுடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ், இரண்டாவது பாகத்தில் ராய் லட்சுமியுடன் கலக்கினார். தற்போது 3வது பாகத்தில் டாப்சியுடன் நடித்து வருகிறார். இவர்கள் தவிர இப்படத்தில் நித்யா மேனன், கோவை சரளா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.