சென்னை 375வது பிறந்ததினம் - ஹன்சிகா கருத்து!

சென்னையின் 375வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தையொட்டி தனக்கும், சென்னைக்கும் இடையேயான உறவை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஹன்சிகா.

அதில், சின்ன வயது முதலே நான் இட்லிக்கு அடிமை. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இட்லி சாம்பாருக்கு அடிமையாக இருந்துள்ளேன். முதன்முறையாக நான் சென்னைக்கு வந்தபோது இங்கு உள்ள பல உணவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. என்னுடைய படப்பிடிப்பின் போது தான் சென்னையில் இன்னும் பல்வேறு நாவில் நீர் ஊறும் உணவு வகைகளும் உண்டு என்று, சென்னையில் இருப்பவர்கள் தங்மான மனதை உடையவர்கள்.


ஒருசமயம் நான் ஷூட்டிங் சென்றபோது வயதான பாட்டி ஒருவர் என் கையை பிடித்து, கண் பட்டுவிடும் என்று கூறி தேங்காயை வைத்து திருஷ்டி சுத்தி போட்டார். அப்போது தான் எவ்வளவு மென்மையான மனிதர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்தேன்.

சென்னையை பற்றி சொல்ல வேண்டுமென்றால், சுறுசுறுப்பானவர்கள், அன்பானவர்கள், மென்மையானவர்கள், கடுமையான உழைப்பாளிகளை கொண்ட ஒரு நகரம் என்று சொல்வேன். சென்னையில், தமிழில் எனக்கு பிடித்த வாக்கியமே ''எனக்கு ரொம்ப பசிக்குது'' என்பது தான். அந்த அளவுக்கு நாவில் நீர் ஊற வைக்கின்றன இந்த ஊர் உணவுகள் என்று சென்னை புகழ் பாடுகிறார் ஹன்சிகா.