தமிழில் வருகிறது சங்கராபரணம்

1979ம் ஆண்டு வெளிவந்து, இந்திய அளவில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படம் சங்கராபரணம். கே.வி.மகாதேவன் இசையில், பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் 4 தேசிய விருதுகளை பெற்றது.

இந்த படம் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக படமாக்கப்பட்டு வந்த இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.
வண்ணமயமாக எடுக்கப்பட்டுள்ள சங்கராபரணம் படத்தில் பல நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு வெளியான சங்கராபரணம் படத்தில் பாடி,தேசிய விருது பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் இந்த படத்திலும் அனைத்து பாடல்களையும் பாடி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.