இறைச்சிக்கு நிகரான தேங்காய்.

தேங்காயின் பெருமையை பற்றி யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம் புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின்  கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக  ஆற்றல் வழங்கக்கூடியது. தாதுக்கள், வைட்டமின்கள் மிகுதியாக கிடைப்பதால் தேங்காயை முழு உணவாகவே சாப்பிடலாம்.

மனிதனுக்கு ஆரோக்கியமும் அழகும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது,
இளநீர். அசைவ உணவு  சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ  மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாது உப்புக்கள், மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.  அதிக அளவில் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும்  தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை  வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.  புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது. தேங்காய் எண்ணை உடலை குளிர்ச்சியுடன்  பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான். தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர்  கோளாறுகளுக்கும் எலும்புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்.