நயன்தராவுடன் ஏற்பட்ட காதலால் தற்கொலைக்கு முயன்ற உதயநிதி...

சமீபகாலமாக நடிகை நயன்தாராவில் எந்தவித பரபரப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரு பெரிய பரபரப்பு கோடம்பாக்கத்தில் உருவாகியுள்ளது.
நயந்தராவுடன் ஏற்பட்ட காதலால் உதயநிதி, தற்கொலைக்கு முயற்சி செய்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான செய்தியால் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

உதயநிதி தயாரித்த படத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா, பிறகு உதயநிதிக்கே நாயகியாக நடித்த படம் தான் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, இருவரும் இணைந்து, பழனி மலைக் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
அப்போது, ஊடகங்களில் இந்தத் தகவல் பரவியது. இதை அடுத்து, குடும்பத்தின் மூத்தவரான கருணாநிதி, உதயநிதியை அழைத்து கண்டித்ததாகவும் தகவல் பரவியது.இந்த நிலையில், உதயநிதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘நண்பேன்டா’ படத்திலும் நயன்தாரா தான் நாயகியாக நடித்துக்கொண்டிருக்க, முதல் படத்தில் துவங்கிய இவர்களின் நெருக்கம் இரண்டாவது படத்திலும் தொடர்ந்தது. இந்த நட்பே அவருக்கு நாளடைவில் நயன்தாரா மீது காதலாக மாறிவிட்டதாம்.

ஆனால், நயன்தாரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படவே, உதயநிதி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்நேரம், உதயநிதிக்கு நெருக்கமான நடிகர் ஒருவர், அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இப்படிச் செய்தி வெளியானதால், உதயநிதி ஆதரவாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்தனர். இதனால் சென்னையில் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.