சினிமாவில் நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும் அனுஷ்கா, திரிஷா, தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் டப்பிங் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான பப்பாளி, வெண்மேகம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ள இஷாரா நாயர் முதல் படத்தில் இருந்தே எனக்கு நானேதான் டப்பிங் பேசுவேன் என்று அடம் பிடித்து வந்தாராம்.
காரணம், இவரது தாய்பூமி கேரளாவாக இருந்தபோதும், இவர் படித்து வளர்ந்ததெல்லாம் கோவைதானாம். அதனால் எனக்கு சுத்த தமிழ் பேசத் தெரியும் என்று முதல் படத்தில் கமிட்டானபோதே சொன்னாராம். ஆனால் அவரது குரலை கேபிஎஸ் சாயலில் இருப்பதாக சொல்லி பப்பாளி, வெண்மேகம் படங்களில் அவரை டப்பிங் பேச விடாமல் செய்து விட்டார்களாம்.
ஆனாலும், சதுரங்க வேட்டையில் எப்படியோ கஷ்டப்பட்டு தனக்குத்தானே டப்பிங் பேசி விட்டார் இஷாரா. அவரது குரலை சிலர் பருத்தி வீரன் ப்ரியாமணி போன்று இருப்பதாக கருத்து சொன்னாலும், பலர் உனது உடல்கட்டுக்கு ஏற்ற குரல்தான் என்று பாஸ் மார்க் கொடுத்து விட்டார்களாம். அதனால், இனி எந்த படமாக இருந்தாலும் எனக்கு நான்தான் டப்பிங் பேசுவேன் என்ற கண்டிசனை முன்வைத்தே புதிய படங்களில் கமிட்டாகப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் இஷாரா.