ஒரு விழாவுக்கு சிவகார்த்திகேயன் வருகிறார் என்றால் எப்படி ஒரு பரபரப்பு இருக்க வேண்டும். அவர் விழா என்றாலே 'மான் கராத்தே' இசை வெளியீட்டில் பவுன்சர்களை வைத்து அவர் ஏற்படுத்திய பரபரப்புதான் ஞாபகத்திற்கு வரும்.
ஆனால், நேற்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற 'மொசக்குட்டி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்தமில்லாமல் வந்து போனார் சிவகார்த்திகேயன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டவர் கடைசி சீட்டில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டார். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்தே அவரைப் பேச அழைத்தனர். அப்போதுதான் வந்திருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என்பதே தெரிய வந்தது.
மைக்கைப் பிடித்தவர், “இந்த படத்தின் விழாவிற்கு நான் வரக் காரணம் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார். அவர்தான் நான் நடித்த 'மான் கராத்தே' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர், தற்போது நான் நடித்து வரும் 'டாணா' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துல ஹீரோவாக அறிமுகமாகிற வீராவுக்கு என்னுடைய வாழ்த்துகள். சீக்கிரமே உங்களைப் பத்தி கிசுகிசுலாம் வரணும். ஒருத்தரைப் பத்தி கிசுகிசுலாம் இப்ப வரலைன்னா அவங்க பெரிய ஹீரோ இல்லைங்கற மாதிரி ஆயிடுச்சி. அதனாலதான் அப்படி சொல்றேன்,” என்றார்.