அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாத முகத்தை பெற 1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவினால் பரு போய்விடும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவினால் பரு போய்விடும்.
பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்.வேப்பிலையை நன்கு அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் தூள், பால், மற்றும் கடலை மாவை கலந்து, முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்து, வெந்நீரால் முகத்தை கழுவி வர, பருக்கள் மறையும். அவ்வப்போது, முகத்தில் பாதாம் பருப்பு விழுது, தேன், பால், ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். முகம் இளமையாக இருக்கும்.
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். முதல் நாள் இரவு, சிறிது பாதாம் பருப்புகளை ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், அதன் தோலை நீக்கி அரைத்து அதில், சிறிது தயிர் அல்லது பால் சேர்த்து முகத்தில் பூசி, இரண்டு நிமிடங்கள் சென்றதும் கழுவினால். வெயிலினால் கறுத்துப்போன பகுதிகளும், கறுந்திட்டுகளும் மறைந்து, முகம் பொலிவடையும்.