நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பெங்களூருவில் ஆரம்பமான படப்பிடிப்பு, அதன் பின் மைசூரில் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாகவே ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
சமீபத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் ரஜினிகாந்த், அனுஷ்கா ஆடிப்பாடும் பாடல் ஒன்று படமாக்கப்பட்டதாம். ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அதிகமாக படமாக்கப்படுவதேயில்லை என்பதற்கு 'லிங்கா' படம் சிறந்த உதாரணம். பெரும்பாலான தமிழ்ப் படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில்தான் நடந்து வருகின்றன. இதனால், இங்குள்ள தமிழ் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் ரசிகர்களும் ஏமாற்றமடைகிறார்கள்.
உடல் நிலையைக் காரணம் கருதி கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களை சந்திக்காத ரஜினிகாந்த் கடந்த பிறந்த தினத்தின் போது, அவருடைய வீட்டில் ஒரு பொதுமேடையில் ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். ஆனால், ரசிகர்களை தனித்தனியாக சந்திப்பதை தவிர்த்து வந்தார். இப்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்குள்ள ரசிகர்களை தினமும் சந்தித்து வருகிறாராம். அதோடு அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறாராம். இது இங்குள்ள ரசிகர்களை வருத்தமடைய வைத்திருக்கிறது.
'லிங்கா' படப்பிடிப்புக் குழுவினரும், மற்ற தெலுங்குத் திரையுலக நட்சத்திரங்களும் ரஜினி, ரசிகர்களைச் சந்திப்பது குறித்து ஆச்சரியப்படுகிறார்களாம். இவ்வளவு உயர்ந்த பின்னரும் ரசிகர்களை அவர் மதிப்பது பெருமைக்குரிய விஷயம் என்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடக்காததால் அவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ரசிகர்களின் ஆவலை ரஜினிகாந்த் நிச்சயம் தீர்த்து வைப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.