சமூக வலைத்தளங்கள் தற்போது பல சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டன. முன்பெல்லாம் அவரவர் கருத்துக்களை பதிய வைப்பதற்கு சரியான தளங்கள் இல்லாமல் இருந்தது.
பத்திரிகைகள் மட்டுமே திரையுலகப் பிரபலங்களின் கருத்துக்களை வெளியிட்டு வந்தன. தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் பல பிரபலங்கள் அவர்களுக்கென தனி கணக்கை ஆரம்பித்து பல விஷயங்களைப் பற்றி அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால், தேவையற்ற சில மோதல்கள் உருவாகவும் காரணமாக அமைந்து விடுகின்றன.
இப்படித்தான், சமீபத்தில் ராம் கோபால் வர்மா இயக்கி வெளிவந்த தெலுங்குப் படமான 'ஐஸ் க்ரீம்' படத்தைப் பற்றி பிரபல இயக்குனரான 'நான் ஈ' ராஜமௌலி ஒரு கருத்தை டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். “ஐஸ் க்ரீம்' படம் தயாரிப்பு வடிவமைப்புக்கு சிறந்த உதாரணமான படம், ஆனால் உள்ளடக்கத்திற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று கூறியிருந்தார்.
ராஜமௌலியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில தினங்கள் கழித்து ராம்கோபால் வர்மா அவரது கருத்தைப் பதிவு செய்திருந்தார். “ராஜமௌலி, மிகப் பிரம்மாண்மான படங்களைத் தயாரித்து, சிறந்த வெற்றிப் பட இயக்குனர் என பெயரெடுத்தவர். ஆனால், பட்ஜெட் படங்களைத் தயாரித்து திரையுலகத்துக்கு நல்லது செய்ய, அவர் ரொம்ப நாளாக கற்றுக் கொண்டு வருகிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்,” என பதிலடி கொடுத்திருக்கிறார்.
இவர்கள் இரண்டு பேருமே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல விஷயங்களைப் பதிவு செய்து எதையாவது சொல்லி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர்களது கருத்துக்களால் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்த மோதலை தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.