சினிமா விழாக்களில் யாராவது நடிகர்களை உயர்த்தி பேச வேண்டுமோ அல்லது தாழ்த்தி பேச வேண்டுமோ எதுவாக இருந்தாலும் தங்குதடையின்றி சரளமாக, தைரியமாக பேசி விடுவார் பார்த்திபன். குறிப்பாக ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்களை பிக்கப் நடிகர்கள், ஒரு நடிகைங்களகூட விட்டு வைக்க மாட்டேங்கிறீங்களே என்று அப்படி இப்படி ஏதாவது சொல்லி அவர்களை கதிகலங்க வைத்து விடுவார்.
அதேசமயம் மேல்தட்டு ஹீரோக்களின் பட விழாக்களில் என்றால் அடக்கி வாசிப்பார். தனக்கே உரிய பாணியில் எடக்கு மடக்காக பேச்சைத் தொடங்கினாலும் முடிவு என்னவோ சுமூகமாகவே இருக்கும். அந்த வகையில், அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன் என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.
ஆனால் தொடர்ந்து அவர் பேசுகையில், சிவகுமார் தான் அனைவரிடமும் அடக்கம், ஒடுக்கம், பணிவு என்று நடந்து கொள்வார். ஆனால், இப்போது பார்த்தால் சூர்யா அவருக்கும் மேல் அடக்க ஒடுக்கமாக இருக்கிறார். எத்தனை உயரத்தில் வளர்ந்தாலும் பணிவு அவர்கூடவே இருக்கிறது. இதைத்தான் சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார் போலிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
அதையடுத்து, நான் இந்த அரங்கிற்குள் வந்ததும் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து எனக்கு வணக்கம் சென்னார் சூர்யா. அப்போது நான் உங்ககூட ஒரு படத்துல நடிக்கிறேன் தெரியுமா? என்று என்னைப்பார்த்து கேட்டார். ஆனால் இந்த கேள்வியை நான்தான் அவரைப்பார்த்து கேட்டிருக்க வேண்டும். காரணம், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில்தான் நான் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். அப்படியிருக்க, என் படத்தில் அவர் நடிப்பது போல் சொல்கிறார். அந்த அளவுக்கு சீனியர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார் சூர்யா என்று ஏகத்துக்கு எடுத்து விட்டார் பார்த்திபன்.
இதை எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சூர்யா, ஐஸ் கட்டியாய் உருகி வழிந்து கொண்டிருந்தார்.