மெட்டிஒலி, கோலங்கள், மேகலா, உதிரிப்பூக்கள் போன்ற தொடர்களில் நடித்தவர் ரேவதி பிரியா. விதவிதமான கேரக்டர்களில் நடித்த ரேவதி பிரியாவை காணவில்லை என்று பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் சின்னத்திரையை விட்டு விலகவே இல்லை.
செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். உற்றுப் பார்த்தால்தான் அது ரேவதி பிரியா என்பதே தெரியவரும். அந்த அளவிற்கு அவரிடம் மாற்றங்கள்.இதுபற்றி ரேவதி பிரியா கூறியதாவது: சீரியலின் மூலம் தமிழ் நாட்டில் உள்ள எல்லா குடும்பங்களிலும் ஒருத்தியாகிவிட்டேன். ஆனாலும் நான் சின்னத்திரைக்கு வர விரும்பியது ஒரு ஜர்னலிஸ்ட்டாகத்தான்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகையானேன். நான் விரும்பிய வாய்ப்பு அமைந்தபோது செய்தி வாசிப்பாளராக என்னை மாற்றிக் கொண்டேன். ஆனாலும் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் வந்தது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாமே என்ற முடிவு செய்துதான் முழுநேர செய்தி வாசிப்பாளராகிவிட்டேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செய்தி வாசித்து வருகிறேன். அதனால் அன்றாட நிலவரம் எனக்கு அத்துப்படி, அரசியல் முதல் தங்கம் விலை விரை விரல் நுனியில் வைத்திருக்கிறேன். இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக செய்திகளின் பின்னணியில் உள்ள நிகழ்வுகளை தொகுத்து நிகழ்ச்சியாக வழங்கும் முயற்சியில் இறங்குகிறேன். சீரியல்களில் நடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் எதுவும் செய்யவில்லை. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் பரிசீலனை செய்வேன். என்கிறார் ரேவதி பிரியா.