சுவைமிக்க வட்டிலாப்பம் தயாரிக்கும் முறை.

தேவையான பொருட்கள்

முட்டை 12
கருப்பட்டி – 400g
தேங்காய் – ½  மூடி திருவியது  
சீனி - 250 கிராம் 

செய்முறை
ரைஸ் குக்கரில் பாதி அளவுக்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.பின்பு தேங்காயில் முதல் பாலை மட்டும் ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும். கருப்பட்டிஐ சிறிதாக சீவி அதை முட்டையில் போட்டு நன்றாக அடித்து அக் கலவையில் தேங்காய் பாலை ஊற்றி கலக்கி கொள்ளவும். பின்பு அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை ரைஸ் குக்கரின் உள்ளே வைத்து ஒரு மணிநேரம்  வேக விடவும். கட்டியான பதத்திற்கு வந்ததும் அதை ஆற விட்டு பரிமாறவும்.   

குறிப்பு : 
* விரும்பியவர்கள் அக்கலவையில் தேவையான அளவு கஜூ,பிளம்சை சிறிதாக வெட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

* அதிகம் இனிப்பு விரும்பாதவர்கள் சீனி சேர்க்காமலும் செய்யலாம்.

* இதை அவனில் வைத்தும் வேக வைக்கலாம்.