தேவையான பொருட்கள்.
கேரட் துருவியது – 1 1 /2 கிலோ
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1 கப்
நெய் – 3 /4 கப்
ஏலக்காய் தூள் – 1 1 /2 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 /4 கப்
முந்திரி பருப்பு(இரண்டாக உடைத்தது ) – 1 /4 கப்
செய்முறை.
* கடாயில் 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி உலர்ந்த திராட்சையை, மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.
* அதே கடாயில் உடைத்த முந்திரியைச் சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
* மீதமுள்ள நெய்யை அல்வா செய்யும்போது பயன்படுத்திக் கொள்ளவும்.
* ஒரு பெரிய கடாயில் பாலை ஊற்றி, துருவிய கேரட் சேர்த்து மிதமான சூட்டிற்கும் மேலே வைத்து வேக விடவும்.கேரட் வேகும் வரை அடிக்கடி கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பால் அளவு ஊற்றியதில் இருந்து பாதிக்கும் கீழே குறைந்திருக்க வேண்டும்.
* இப்பொழுது சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பால் முழுவதுமாக வற்றி, கலவை திக்காக இருக்க வேண்டும்.
6. நெய்யை இரண்டாகப் பிரித்து, ஊற்றி கிளறிக் கொள்ளவும். கேரட் நிறம் கருஞ்சிவப்பாக மாறும் வரை மற்றும் பால் சுத்தமாக வற்றும் வரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
7. அல்வா மெது மெதுவாகவும், ஈரப் பதத்துடனும் இருக்க வேண்டும். அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: மிகுதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் கேரட் அல்வா சாப்பிடுவதற்கு வெது வெதுப்பாக இருக்க வேண்டும். அதனால் பரிமாறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக சூடு செய்து கொள்ளவும்.