சுவையான மாம்பழ ஐஸ்கிரீம்.


பெரிய மாம்பழம் – 2
பால் – 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை
ஜெல்லி – 2 மேஜைக் கரண்டி

செய்முறை
• பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

• மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
• குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

• பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

• பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.