கோடைக்கு ஏற்ற தர்பூசணி ஜூஸ்.


தேவையான பொருட்கள்.

சிறிது தேசிக்காய் சாறு
தர்பூசணி துண்டுகள்
பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை (அ) தேன்
சிறிது உப்பு
ஐஸ் கியுப்ஸ்

செய்முறை:
தர்பூசணி பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரிந்து அதை மிக்சியில் இட்டு சர்க்கரை, உப்பு, தேசிக்காய் சாறு அனைத்தையும் போட்டு நன்கு அடித்த பின்பு அக்கலவையில் ஐஸ் கியுப்ஸ் இட்டு பருகவும்.

தர்பூசணி இலகுவில் தாகத்தை தணிக்க கூடியதாகையால் கோடை காலத்திற்கு தர்பூசணி ஜூஸ் மிகவும் நல்லது.
.