இலகுவான கோதுமை மஸ்கட்.


தேவையான பொருட்கள்.

1 கிலோ சீனி
50 கிராம் முந்திரிப்பருப்பு
கோதுமை மா 750 கிறாம்
1/6 லீற்றர் நெய்
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை.
தண்ணீர் சேர்த்து கோதுமைமாவை கெட்டியாக குளைத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வைத்து அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் அம்மாக்கலவையை ஊறவைத்த தண்ணீருல் சிறிது சிறிதாக சேர்த்து கரைத்து துணியில் வடித்து பாலாக எடுக்கவும்.

பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை உருக விடவும் . சீனி நன்றாக உருகியதும் அதனுள் அம்மாப்பாலை ஊற்றி கட்டி படாது தொடர்ந்து கிண்டவும்.

கலவை ஒட்டும் பதம் வரும் போது நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும் திரள தொடங்கும் போது அதனுள் முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிண்டவும்.

கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்