ஆப்பிளின் இனங்கள்.


இன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விட கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில், மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன.

ஆப்பிள் சுவைமணம் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் 'ரெட் டெலிசியஸ்' என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்து புகழடைந்தது.
ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விட குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர்.குளிர்ப் பகுதிகளில் பலவிதமான மண்களிலும் ஆப்பிள் வளரவல்லது.

பயிரிடப்படும் ஆப்பிள் வகைகளும், பயிரிடப்படும் இடங்களும் கீழ்வருமாறு:

அன்டனோவ்கா (ருஷ்யா)
பால்ட்வின் (அமெரிக்கா: மாசசூசெட்ஸ்)
ப்ராபொர்ன் (நியுசிலாந்து)
ப்ராம்லே (இங்கிலாந்து)
கோர்ட்லான்ட் (அமெரிக்கா: நியுயார்க்)
ப்யூஜி (ஜப்பான் மற்றும் ஆசியாவெங்கும், ஆஸ்திரேலியா)
கோல்டன் டெலிசியஸ் (அமெரிக்கா: வாஷிங்டன்)
க்ரானி ஸ்மித் (ஆஸ்திரேலியா)
க்ராவென்ஸ்டீன் (ஜெர்மனி)
மக் இன்டோஷ் (கனடா)
ராயல் காலா (நியுசிலாந்து)
சிடர் இரகங்கள்:
டைமாக் ரெட்
கிங்ஸ்டன் பிலாக்
ஸ்டோக் ரெட்
அடிப்பாக கன்று இரகங்கள்:
வீரிய, மிக வீரிய இரகங்கள்: டவுசின், M1, M2, M16, M25, MM106, MM111
குள்ள இரகங்கள்: பிரென்ச் பாரடைஸ், M9, M26, M27
வறட்சி தாங்கும் இரகங்கள்: நார்தர்ன் ஸ்பை