மெழுகுவர்த்தி தயாரிக்கும் முறை.


மெழுகை தயாரிக்க பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் போன்ற பொருட்கள் தேவைப்படும்.

மெழுகை தயாரிக்கும் முறையானது கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.

முக்கிய குறிப்பு: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 1மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 2 மணி நேரம் எரியும்.