தேவையான பொருட்கள்.
அரிசி-2 கப்
பாசிப்பருப்பு -4 டேபுள் ஸ்பூன்
நெய்-100 கிராம்
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
பால்-1கப்
வெல்லம்-3/4 கப்
காய்ந்த திராட்சை- தேவையான அளவு
ஏலக்காய் -3 பொடி செய்தது
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 8 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.தனியாக பாலை சூடு செய்யவும்.
பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் பருப்பு,அரிசியை இட்டு பத்திரத்தில் பாலையும் ஊற்றி
வெந்ததும் அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு கலக்கி ஒரு வானலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரிப்பருப்புயும்,காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்துக்கொள்ளவேண்டும்.
அதில்ஏலக்காய் பொடியும், உலர்ந்த திராட்சையையும் போடவும்.
சிறிது நேரம் சூடு செய்யவும்.
பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.