கண்களிலுள்ள கருவளையம் மறைய பஞ்சுத் துண்டை பன்னீரில் நனைத்து பத்து நிமிடங்களுக்கு கண்களை சுற்றி வைக்கவும்.
உள்ளங்கைகள் கடின தன்மையாக உள்ளவர்கள் ஆலிவ் எண்ணையுடன் சர்க்கரை கலந்து தேய்த்து கழுவி வர கைகள் மிருதுவாகும்.
ஆரஞ்சு பழ தோலை காயவிட்டு தூளாக்கி அதில் சிறிது பால் விட்டு குலைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டு கழுவினால் வெயிலில் ஏற்பட்ட கருமை மாறி முகம் பிரகாசிக்கும்.
ஆப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவிவர நாளடைவில் முகத்தின் எண்ணெய் தன்மை குறையும்.
கடலை மாவுடன் பால் ஏடு கலந்து பூசினால் முக பருக்கள் குறையும்.
புதினா இலைகளின் சாறெடுத்து முகத்தில் தடவிவர உலர்ந்த தன்மை,முகப்பருக்கள் நீங்கும்.