மருதாணி இலை, துவரம் பருப்பு என்பவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூச பித்த வெடிப்பு குறையும்.
நல்லெண்ணையை காலில் தேய்த்து கழுவிவர கால்கள் அழகாகும்.
நகங்களை வெட்டும் முன் நகத்தின் மீது எண்ணையை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து வெட்டினால் அழகாகவும் விரும்பும் வடிவத்திலும் வெட்ட இயலும். சந்தன பொடி, கடலை மாவு, வெள்ளரிச்சாறு முன்றையும் சம அளவில் கலந்து முகம்,கை,கால்களுக்கு பூசி வர பிரகாசமாகும்.
கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு சரிவராது.
கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.