இன்றைய தொழிநுட்ப உலகில் "கடவுச்சொல்" என்பது மிகவும் முக்கியமானதல்லவா? நமது கணணி, மற்றும் Smart சாதனங்களில் உள்ள எமது தனிப்பட்ட தகவல்களை ஏனையயவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு, வெவ்வேறுபட்ட இணையதளங்களில் எமக்கென கணக்கொன்றினை உருவாக்கி கொள்வதற்கு, இணையத்தின் மூலம் வங்கி நடவடிக்கைகளை அல்லது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாம் கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.
அவ்வாறு நாம் பயன்படுத்தும் கடவுச்சொல்லானது வலிமையாக அமைய ஆங்கில பெரிய எழுத்துக்கள், ஆங்கில சிறிய எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு ஆகக் குறைந்தது 8 எழுத்துக்களையாவது கொண்டமைதல் வேண்டும்.
எனவே இவ்வாறு உருவாக்கப்படும் கடவுச்சொற்கள் நிச்சயம் வலிமையானதாக அமையும். விடயம் என்னவெனில் அவ்வாறு நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையானதுதானா? அப்படியாயின் அது எந்த அளவு வலிமையானது என்பதனை அறிந்து கொள்ள உதவுகிறது Passwordmeter எனும் இனைய தளம். உங்களுக்கு என வலிமையானதொரு கடவுச்சொல்லை உருவாக்கிகொள்ளவோ அல்லது உங்கள் கடவுச்சொல் வலிமையானதுதான? என்பதனை புள்ளிவிபர அடிப்படையில் அறிந்துகொள்ள முடியும்