மின்சாரம் தாக்கி மேக்னடிக் மேனாக மாறியுள்ளான் ரஷ்யாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை என்ற சிறுவன் சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளான். மயக்கமடைந்த அச்சிறுவனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவனது வீட்டில் அவனை பத்திரமாக சேர்த்துள்ளனர். மயக்கத்திலிருந்து விழித்து காலையில் எழுந்த சிறுவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
அவனது படுக்கையில் இருந்த சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது தவறவிட்ட ஸ்பூன், அது அவனது நெஞ்சில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் பள்ளிக்கூடத்தில் பிரபலமடைந்த நிக்கோலை, தற்போது மாணவர்கள் மத்தியில் சாகசங்கள் செய்து அசத்தி வருகிறான். அக்கம் பக்கத்தினரும் இவனை ஆச்சரியத்துடன் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.