விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். நீண்ட நாள் தயாரிப்பு, நீண்ட போராட்டம், பல்வேறு பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி கடந்த பொங்கல் அன்று (ஜன 14) ஐ வெளிவந்தது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் உழைப்பு, எமி ஜாக்சனின் அழகு, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தைரியம் அனைத்தையும் ஐ உறுதி செய்தது.
மக்கள் இவர்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள். படத்தின் விமர்சனங்கள் பல்வேறு கோணங்களில் வந்திருந்தாலும். மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு லாபத்தைக் கொடுத்தது.
நேற்று (மார்ச் 1) ஐ 50வது நாளை கடந்திருக்கிறது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, உட்லண்ட்ஸ், சாந்தி, ஆல்பட், அபிராமி, சங்கம், பிவிஆர், லக்ஸ், மாயாஜால் வளாகங்களில் 50 நாளை கடந்திருக்கிறது. தமிழ் நாடு முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது சுமார் 60 தியேட்டர்களில் 50 நாளை தொட்டிருக்கிறது. சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் 100வது நாளை தொடலாம்.