பாடசாலை செல்லும் மாணவர்கள் காலை நேரத்தில் வாழைப்பழம் மற்றும் ஒரு கப் பால் மட்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். ஆனால் காலையில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மைதானா என பார்ப்போம். காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது தவறானதல்ல.
ஆனால், அதற்காக தினமும் அதை மட்டும் சாப்பிடுவதும் நல்லதல்ல. பரபரப்பாகக் கிளம்பும் உங்கள் பெண் வாழைப்பழமும் பாலும் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதான்.
இதனால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், அதையே தினமும் சாப்பிட்டால் மற்ற சத்துகள் கிடைக்காமல் போய் விடும். வாரத்தில் இரண்டு நாள் வாழைப்பழம் சாப்பிடலாம். மற்ற நாட்களில் ராகி கஞ்சி, வேக வைத்த முட்டை, ஃப்ரெஷ் ஜூஸ், சத்து மாவு கஞ்சி உள்ளிட்டவற்றை கொடுத்துப் பழக்குங்கள்.