பெண்களின் நோய்களும் அதற்கான தீர்வும்.

பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.

அந்த காலத்தில் அண்டா அண்டாவா கூட்டு குடும்பத்தில் பெண்கள் சமைப்பார்கள், எல்லோரும் திடகாத்திரமாக தான் இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் கொஞ்சம் நாளிலேயே முடியல கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என்கிறார்களே என்னவா இருக்கும் என்று சமைக்கும் போது தான் நிறைய யோசனை வரும், அதற்கான சில காரணங்கள்.

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது. இந்த காலத்தில் அரைக்க துவைக்க என்று எல்லாத்துக்கும் மிஷின் வந்து விட்டது.
இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது.

பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.
ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்

சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம்.சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள்.ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது.


ரெஸ்ட் எடுத்து வேலை செய்ய‌. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்க‌ளை விட‌ வீட்டில் உள்ள‌ பெண்க‌ளுக்கு தான் வேலை அதிக‌ம். அப்ப‌டியே கிச்ச‌ன் மேடை கிட்ட‌ நின்று கொண்டே காய‌ ந‌ருக்காம‌ல் உட்கார்ந்து எல்லாம் ரெடியாக‌ க‌ட் செய்து வைத்து விட்டு பிற‌கு செய்ய‌லாம்.இஞ்சி பூண்டு நருக்கும் போது அதிக நேரம் எடுக்கும் அதற்கு உட்கார்ந்து பார்க்கலாம்.

இப்படி நின்று கொண்டு ச‌மைக்கும் போது சில‌ பேர் தாளிக்கும் போது ர‌ச‌ம் கொதிக்கும் போது, காய் வேகும் போது அப்ப‌டியே ச‌ட்டிய‌ உற்று பார்த்து கொண்டு இருக்காம‌ல் அந்த‌ நேர‌த்தில் சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிற்சி செய்து ந‌ம்மை ரிலாக்ஸ் செய்து கொள்ள‌லாம்.

ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம்.
* தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழுந்திரிக்க‌லாம். எல்லாம் ஒரு 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம். இது மூட்டு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

*கைக‌ளுக்கு உட‌ற் ப‌யிற்சி இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌ வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌லாம்.இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

* இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக‌ நின்று கொண்டு வ‌ல‌து இட‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம். இது இடுப்பு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

* உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்ப‌டியே ஒரே மூச்சா வேலை செய்யாம‌ல் இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிசிக‌ளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்ய‌லாம்.

*. த‌லையை ம‌ட்டும் மேலும் கீழும், இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம், இது க‌ழுத்து நல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

* துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும்.
துணி துவைக்க‌ வாஷிங் மிஷின் தான் ஆனால் சில‌ டோர் மேட்க‌ளை கையில் தான் துவைக்க‌ வேண்டி வ‌ரும் , அதை ந‌ல்ல‌ சோப்பு த‌ண்ணீரில் ஊற‌வைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வ‌லிக்கும் ஒரு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சியாகுது.

* குழந்தைகளை குளிக்க வைக்க கூட இடுப்பு  வலிக்க குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்கவைக்கலாம்.

*கம்பியுட்டர் முன் அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

* வாகனங்களில் செல்லும் போது கூட (ஓட்டுபவர்களை சொல்லல)ஐந்து நிமிடம் கண்களை மூடி கண்ணுக்கும் ரெஸ்ட் கொடுக்கலாம்.

*. இரவு தூங்க போகும் போது, காலை எழுந்திரிக்கும் போது கூட எழுந்ததும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும் இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும், (பிறகு முதுகுவலிக்கு ஈசியான உடற்பயிற்சிகளை போடுகிறேன்.)

அதற்கு தகுந்த நலல் உணவும் சாப்பிட்டு கொள்வது நல்லது.
வேலை பிஸியில் பெண்கள் காலையில் சாப்பிடும் டீ, டிபன் கூட மறந்து விடுகிறார்கள்.இப்போது நிறைய பெண்களுக்கு சின்ன வயதிலேயே முதுகுவலி கால் வலி இடுப்புவலி, என்று வந்து விடுகிறது.
தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம்.முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இறங்கலாம்.
ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம்.

நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும்.மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டு படுத்தலாம்.