மூன்று காதலில் தோல்வி கண்ட சிம்பு!

சிம்பு அவருடைய மூன்று காதலைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவருடைய இரண்டு காதல்
பற்றியும், அந்த இரண்டு காதலிகள் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

ஏனென்றால் அவர்களிருவருமே திரைப்பட நடிகைகள்தான். 'வல்லவன்' பட சமயத்தில் நயன்தாராவைக் காதலித்த சிம்பு சீக்கிரமே அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். அதன் பின் சமீபத்தில் 'வாலு' படப்பிடிப்பில் ஹன்சிகாவைக் காதலிப்பதாக அறிவித்தவர் திடீரென அவரை விட்டும் பிரிந்துவிட்டார்.
சிம்புவின் இந்த இரண்டு காதல் தோல்விகளும் அவரை நிறையவே பாதித்துவிட்டது, அவரை மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், சிம்பு இதுவரை வெளிப்படையாகச் சொல்லாத
அவருடைய மூன்றாவது காதலும் ஒன்று இருக்கிறதாம். ஆனால், அந்தக் காதல்தான் அவருடைய முதல் காதல் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.மூன்று காதலிலும் தோல்வியடைந்ததைப் பற்றி அவர் என்ன சொல்கிறார். “எனக்கு இதுவரை மூன்று காதல்கள் வந்து போய்விட்டன. ஆனால், எந்த காதலும் நிரந்தரமாக இல்லாமல் போய்விட்டது. எனது தங்கையின் திருமணத்திற்குப் பிறகு எனது திருமணம் நடக்கும் என்று சொல்லியிருந்தேன். அந்தச் சமயத்தில் என்னுடன் ஒரு பெண் இருந்தாள். ஆனால், இப்போது அவள் யாரோ, நான் யாரோ... இப்போது எனக்கு காதல் என்றாலே போரடித்துவிட்டது. ஆனாலும்,  காதலை நான் காதலிக்கிறேன். ஒவ்வொரு காதலுமே என் கூட கடைசி வரைக்கும் வரணும்னு நினைச்சேன். எவ்வளவு வேணும்னாலும் காதலிக்கலாம், ஆனால் காதலிக்கிறவங்க வாழ்க்கையில ஒண்ணு சேர முடியாதுங்கற எண்ணம் எனக்கு வந்துடுச்சி. என்னோட காதல் தோல்விகள்தான் என்னைக் பக்குவப்படுத்தியிருக்கு,” என ஒரு தத்துவஞானி போலவே பேசுகிறார் சிம்பு.