விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் டீசர் அண்மையில் யூடியூபில் வெளியானது. வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்த ஆரஞ்சு மிட்டாய் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவரை 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆரஞ்சுமிட்டாய் டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர். சுமார் 3500 பேர் லைக் பண்ணி இருக்கின்றனர்.
ஆரஞ்சு மிட்டாய் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷத்திலிருக்கும் விஜய் சேதுபதிக்கு, இப்போது கூடுதலாக இன்னொரு சந்தோஷமும்....! என்ன சந்தோஷம்? சிம்பு, பிரபுதேவா என்று ஆட்டோகிராப் பக்கங்கள் புரட்டப்பட்டாலும் நம் ஹீரோக்களுக்கு நயன்தாரா மீது உள்ள மயக்கம் கொஞ்சமும் குறையவில்லை. கிறக்கமும்தான்.
இதற்கு விஜய்சேதுபதியும் விதிவிலக்கில்லை என்பதை சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் அவரே வெளிக்காட்டினார். தனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாராதான் என்றும், சூது கவ்வும் படத்தில் வருவதுபோல் எந்த நடிகையையாவது கடத்த வேண்டுமென்றால், நான் நயன்தாராவைத்தான் கடத்துவேன்" என்றும் சொல்லி இருந்தார் விஜய்சேதுபதி. அவரிடம் கால்ஷீட் வாங்கி படம் தயாரிக்க திட்டமிட்டிருந்த தனுஷ், விஜய்சேதுபதியின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு நயன்தாராவை கதாநாயகியாக கமிட் பண்ணிவிட்டு விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்டார். நயன்தாரா கதாநாயகி என்று தெரிந்த உடனே தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்சேதுபதி. கதை என்ன, தன்னுடைய கேரக்டர் என்ன, சம்பளம் என்ன, எவ்வளவு அட்வான்ஸ் என எதைப்பற்றியும் கேட்காமல் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டதில் தனுஷ் சந்தோஷமாகிவிட்டார். விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் நயனும், விஜய்சேதுபதியும் க்ளோஸ் ப்ரண்ட்ஸாகிவிட்டனராம்.

cinema, vijaysethupathi, nayanthara