முதன் முறையாக நாட்டிய நாடகத்தில் நடிக்கின்றார் சுகாஷினி!

பிரபல நாட்டிய கலைஞர் கிருத்திகாவின் நமார்கம் டான்ஸ் கம்பெனியும், சுகாஷினி டேலன்ட் சவுத் நிறுவனமும் இணைந்து அந்தரம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகிறது.

இது வருகிற 28ந் திகதி சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி ஆகியவற்றை தேவதைகளின் கதைகள் வழியாக மக்களுக்கு எளிதில் புரியும்படியாக இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் கிருத்திகா சுப்பிரமணியம் பரத நாட்டியத்தையும், கோபிகா வர்மா மோகினி ஆட்டத்தையும் யாமினி ரெட்டி குச்சிபுடி நடனத்தையும் ஆடுகிறார்கள். நடிகை சுஹாசினி நாடகம் மற்றும் நடன பாணியில் கர்நாட மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் கோல் குப்பஷ் பகுதியை சேர்ந்த இப்போதும் கொண்டாடப்படும் ரம்பா என்ற நடனப்பெண்ணின் கதையை நாட்டிய நாடகமாக நடிக்கின்றார். இதற்கான பாடலை அருண், ராஜ்குமார், மற்றும் சுகாஷினி எழுதி உள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார், ஜெயேந்திரன் இயக்கி உள்ளார்.