தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா ஐதராபாத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன. சில படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இரண்டையும் ஒன்றாகத்தான் பார்த்தேன். தோல்வி அடைந்ததற்காக வருத்தப்பட்டது இல்லை. வெற்றி–தோல்வியில் எனக்கு சம்பந்தமில்லை என்பது போல்தான் இருப்பேன்.
அந்த வகையில் நான் ஒரு சுயநலக்காரி.படங்களில் என் கேரக்டர் என்ன எப்படி நடித்தேன் என்பதை தான் பார்ப்பேன். தோல்வி அடைந்த படங்களில் கூட நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்று பாராட்டுகள் கிடைத்துள்ளன. எனவே என்னை பொறுத்தவரை படம் நன்றாக ஓடாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் என் நடிப்பை பாராட்டுவதை கேட்கும் போது மகிழ்ச்சிதான்.
படங்கள் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றாலும் அதன் முழு பொறுப்பும் தயாரிப்பாளரைத்தான் சாரும். அவர் தேர்வு செய்த கதையும் டைரக்டரும் சரி இல்லாததால் படங்கள் தோற்றன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நடிகர்கள் அதற்கு பொறுப்பு ஆக முடியாது. எனக்கு நடிப்பு வரவில்லை என்று ரசிகர்கள் சொல்லும் நிலைமை ஏற்பட்டால் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.