ஒரே நாளில் படத்தை தொடங்கும் விஜய்-ஆர்யா

கத்தி படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதிப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நட்ராஜ் கவனிக்கவுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.அதேபோல், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திற்குப் பிறகு ஆர்யாவை வைத்து ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றி பெற்றதையடுத்து இப்படத்தை உருவாக்குகிறார்கள்.


இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜேஷின் வழக்கமான காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தை ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.இவ்விரு படங்களும் ஒரே நாளில் படத்தை தொடங்குவதால் ரசிகர்கள் மற்றும் சினிமா உலகத்தினர் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.