ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவியின் நடிப்பில் தயரான படம் பூலோகம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் பூலோகம் படத்துக்கு இன்னும் விமோசனம் பிறக்கவில்லை. நீண்டநாட்களாக... இல்லை... இல்லை... நீண்ட மாதங்களாக ரிலீஸுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது பூலோகம் படம்.
பூலோகம் படத்தை ரிலீஸ் பண்ணும்படி சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளரிடம் கண்ணீர் மல்காத குறையாக கேட்டுவிட்டார் இயக்குநர். ஆனால் தயாரிப்பாளர் மனம் இரங்கவில்லை. பிறகு ஜெயம் ரவியே நேரடியாய் சென்று தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியை சந்தித்து பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய கேட்க சென்றார்.
அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ஆஸ்கார் ரவி. இந்நிலையில் தீபாவளி அன்று பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக தன்னுடைய விநியோகஸ்தர்களிடம் கூறி இருக்கிறார். கத்தி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து ஏறக்குறைய 800 தியேட்டர்களை புக் பண்ணிவிட்டதால், பூலோகம் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்று விநியோகஸ்தர்கள் சொல்ல, பூலோகம் படத்தை மீண்டும் தள்ளி வைத்துவிட்டார் ஆஸ்கார் ரவி.