சூர்யா, காஜல் அகர்வால் நடித்த 'மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'அயன், கோ, மாற்றான்' படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமானது. பல காரணங்களால் அவ்வப்போது படப்பிடிப்பு தடைபட்டு தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. தனுஷ், இடையில் ஹிந்திப் படங்களில் நடிக்க சென்று விட்டதும் தாமதத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
'மாற்றான்' படத்தின் தோல்வியால் இப்படத்தை கண்டிப்பாக வெற்றிப் படமாக்க வேண்டும் என்று படத்தை மிகவும் வித்தியாசமாக உருவாக்கி வருகிறாராம் இயக்குனர் ஆனந்த். தனுஷ், படத்தில் நான்கு விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார் என்கிறார்கள். 80களின் காதல் நாயகன் கார்த்திக் தான் படத்தின் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'அயன், கோ, மாற்றான்' படங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்திருந்தது. குறிப்பாக 'அயன், கோ' படங்களின் மாபெரும் வெற்றிக்கு பாடல்களும் உதவி புரிந்தன. அந்த மாயம் இந்தப் படத்திலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுள்ளனவாம். படத்தின் பாடல்களுக்கான கடைசி கட்ட மிக்ஸிங் நடந்து வருகிறதாம். அது முடிந்ததும் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.