சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக ஹீரோ ஜிதேஷ்!

சிக்கிமுக்கி, தலக்கோணம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஜிதேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவராம். அதோடு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாராம். நார்வேயில் இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்த்து விட்டுதான் இவரை சிக்கி முக்கி படத்திற்கு புக் பண்ணினார்களாம்.

அந்த படத்தையடுத்து தலக்கோணம் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. இந்த படத்தில் ஜிதேஷின் நடிப்பைப் பார்த்து விட்டு எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்திருப்பதாக அப்பட டைரக்டர் பாராட்டினாராம். அதனால் இதையடுத்து முன்னணி டைரக்டர்களின் படங்களில நடித்து முன்னணி ஹீரோ பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் ஜிதேஷ்.


அதுகுறித்து அவர் கூறுகையில், முதல் இரண்டு படங்களிலும் புதுமுக டைரக்டர்களின் படங்களில் நடித்து எனது நடிப்பு திறமையை ஓரளவு வளர்த்துக்கொண்டேன். அதனால் அடுத்து பெரிய பேனர், பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்தால்தான் ரீச் ஆக முடியும் என்பதால் பெரிய படங்களாக எதிர்பார்க்கிறேன்

மேலும், எனக்கு பிடித்த நடிகையாக 2 மாதத்துக்கு முன்பு வரை நஸ்ரியா இருந்தார். ஆனால் இப்போது சமந்தாதான் எனக்கு பிடித்தமான நடிகை என்று சொல்லும ஜிதேஷ், அவரது அழகும், நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் சமந்தா மாதிரி நடிகைகளுடன் நடித்து நானும் முன்னணி நடிகராக வளர வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.