பழங்களின் ஆங்கில, தமிழ் பெயர்கள்.

உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்தந்த நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:

Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது ஒரு சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம்.
சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.

இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும், அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.

Apple    குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Ambarella    அம்பிரலங்காய்
Annona    சீத்தாப்பழம்    
Annona muricata       முற்சீத்தாப்பழம்
Apricot      சர்க்கரைப்பாதாமி
Avocado       வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
Banana      வாழைப்பழம்   
Batoko Plum      லொவிப்பழம்   
Bell fruit               பஞ்சலிப்பழம், ஜம்பு   
Bilberry                அவுரிநெல்லி   
Blackberry           மேற்கத்திய நாவற்பழம்    
Black currant      கறுந்திராட்சை
Blueberry            ஒரு வகை நெல்லி   
Bread fruit          கொட்டைப்பலா, சீமைப்பலா 
Butter fruit         ஆனைக்கொய்யா
Cantaloupe         மஞ்சல் நிற முலாம்பழம்  
Cashew fruit      முந்திரிப்பழம், கஜு   
Cherimoya          சீத்தாப்பழம்    
Cherry       சேலாப்பழம்    
Chickoo           சீமையிலுப்பை 
Citron    கடார நாரந்தை 
Citrus aurantium          கிச்சலிப்பழம்
Citrus reticulata           கமலாப்பழம்   
Citrus sinensis   சாத்துக்கொடி   
Clementine        நாரந்தை  
Cocoa fruit          கொகோப்பழம்  
Cranberry            குருதிநெல்லி   
Cucumber           வெள்ளரிப்பழம் 
Custard apple    சீத்தாப்பழம்    
Damson               ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit             பேரீச்சம் பழம்
Devilfig     பேயத்தி  
Dragon fruit        ட்றொகன் பழம் 
Duku     டுக்கு,சடுகுடு
Durian   முள்நாரிப்பழம், தூரியன்    
Emblica   நெல்லி   
Eugenia rubicunda           சிறு நாவற்பழம்
Feijoi/Pinealle guava      புளிக்கொய்யா  
Fig          அத்திப்பழம்    
Persimmon fruit               சீமை பனிச்சம்பழம்  
Gooseberry        கூஸ்பெறி
Grapefruit           பம்பரமாசு 
Grapes    கொடி முந்திரி, திராட்சை   
Guava    கொய்யாப்பழம் 
Honeydew melon            தேன் முழாம்பழம்   
Huckle berry      (ஒரு வித) நெல்லி   
Jack fruit              பலாப்பழம்
Jumbu fruit         ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்  
Jamun fruit         நாகப்பழம்
Kiwi fruit              பசலிப்பழம்
Kumquat             (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
Kundang              மஞ்சல் நிற சிறிய பழம்
Lansium               லன்சியம் 
Lemon    வர்க்கப்பழம்    
Lime      எழுமிச்சை
Loganberry         லோகன் பெறி  
Longan     கடுகுடாப் பழம் 
Louvi fruit            லொவிப்பழம்   
Lychee    லைச்சி   
Mandarin            மண்டரின் நாரந்தை  
Mango    மாம்பழம் 
Mangosteen      மெங்கூஸ் பழம்
Melon     இன்னீர்ப் பழம், முழாம்பழம்
Morus macroura              மசுக்குட்டிப்பழம்
Mulberry             முசுக்கட்டைப் பழம்  
Muscat grape    திராட்சை 
Orange    தோடம்பழம்    
Palm fruit            பனம் பழம்
Papaya   பப்பாப் பழம்    
Passion fruit       கொடித்தோடை
Peach    குழிப்பேரி 
Pear       பேரி, பெயார்ஸ் 
Pine apple           அன்னாசிப் பழம்
Plum      ஆல்பக்கோடா  
Pomegranate    மாதுளம் பழம், மாதுளை   
Pomelo                பம்பரமாசு 
Pulasan                (ஒரு வகை)றம்புட்டான்    
Quince   சீமை மாதுளம்பழம்  
Rambutan           றம்புட்டான்    
Rasberry              புற்றுப்பழம்
Red banana        செவ்வாழைப் பழம்   
Red Currant        ஒரு வித லொவி    
Sapodilla              சீமையிலுப்பை 
Satsuma               நாரத்தை  
Sour sop/ Guanabana    அன்னமுன்னா பழம்  
Strawberry         செம்புற்றுப்பழம்
Syzygium             ஜம்புப்பழம்
Tamarillo              குறுந்தக்காளி   
Tamarind             புளியம்பழம்    
Tangerine            தேன் நாரந்தை 
Tomato                தக்காளிப்பழம்  
Ugli fruit               முரட்டுத் தோடை    
Water melon     வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி 
Wax jumbu         நீர்குமளிப்பழம் 
Resberry              இளஞ்செம்புற்றுப் பழம்    
Woodapple        விளாம்பழம்