தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெறறிமாறன். இதில் ஆடுகளம் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அதற்கடுத்து வெற்றிமாறன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமானது. அதையடுத்து அவர் சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை எடுக்கவும் தயாரானார்.
ஆனால், இதோ அதோ என்று சொன்னவர்கள பின்னர் படத்தையே கிடப்பில் போட்டு விட்டனர். அதையடுத்து படம் இயக்கும் வேலைகளில் இறங்காத வெற்றிமாறன், உதயம் என்எச்4 என்ற படத்தை தயாரித்தவர், நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அதைத் தொடர்ந்து பொறியாளன் என்ற படத்தை வெளியிட்டார். தற்போது காக்கா முட்டை, ஈட்டி போன்ற படங்களை தயாரிக்கிறார்.
இந்த நிலையில், மீண்டும் தனுஷை வைத்து அவர் சூதாடி என்ற படத்தை இயக்கி வருவதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது அட்டகத்தி தினேஷை வைத்து விசாரணை என்றொரு ஒரு மணி நேர படத்தை அவர் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகுதான் தனுஷ்-பார்த்திபன் நடிக்கும் சூதாடி படத்தை இயக்குகிறாராம் வெற்றிமாறன்.
மேலும், பொல்லாதவன் படத்தை 2007-ம் ஆண்டு இயக்கிய வெற்றிமாறன், அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து நான்காவது ஆண்டு அதாவது 2011ம் ஆண்டுதான் ஆடுகளம் படத்தை வெளியிட்டார். அதேபோல், மீண்டும் தனுசுடன் இணையும் சூதாடி படத்தையும் நான்காவது ஆண்டாக அதாவது 2015-ல்தான் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன். எதற்காக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இப்படி 4 ஆண்டுகளை இடைவெளி விடுகிறார் என்பது வெற்றி மாறனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.