ஹிருத்திக் ரோஷன், நாகர்ஜூனாவை பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்றுள்ள பல நடிகர்-நடிகைகள், பொதுமக்களிடத்தில் அந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் மும்பையில் சில வீதிகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் ஹிருத்திக்.
 இந்த செய்தியை கேள்விப்பட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்திருத்தார் பிரதமர் மோடி.
அவரைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும் தனது மனைவி அமலா, மகன் நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தாருடன் இணைந்து ஐதராபாத்தில் தனது அன்னபூர்ணா ஸ்டுடியோ இருக்கும் தெருவை சுத்தம் செய்தார்.
இந்த சேதி அறிந்து நாகர்ஜூனா, நாக சைதன்யாவின் ரசிகர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தெருக்களை சுத்தம் செய்தார்களாம்.மேலும், நாகர்ஜூனாவும் ரசிகர்களைப்போன்று வெகுநேரமாக சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டாராம். இந்த சேதி பிரதமருக்கு செல்ல, ஹிருத்திக் ரோசனைத் தொடர்ந்து நாகர்ஜூனாவையும் பாராட்டி தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.